இரு மனிதர்களுக்கிடையே அவ்விருவரின் அனுமதியின்றி அமர்வது கூடாது.
-அபூதாவூத்
மனிதன் யாரை நேசிக்கிறானோ, அவருடன்தான் மறுமையில் இருப்பார். அவரது தோழமைதான் கிடைக்கும்.
– முஸ்லிம்
எவர் லுஹாத் தொழுகையை நிரந்தரமாக தொழுது வருவாரோ, அவரின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அப்பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் சரியே!
– இப்னுமாஜா
எவர் பிறரிடம் ஒருவரை இழிவுபடுத்துவதற்காக அவரிடம் இல்லாத குறையைக் கூறுவாரோ, அந்தத் தீமையை நிரூபிக்கும் வரை அல்லாஹுதஆலா அவரை நரக நெருப்பில் கைது செய்து வைத்திருப்பான். (அவர் எப்படி நிரூபிப்பார்?)
– தப்ராணீ
முகத்திற்கு முன் புகழ்பவர்களைக் கண்டால் அவர்களின் வாயில் மண்ணை வாரி இறையுங்கள்.
– முஸ்லிம்
ஒரு மனிதரிடம் மூன்று குணங்கள் இருந்துவிட்டால், அவருடைய ஈமான் பூரணமாகும்.
- முதலாவதாக, இறைவனுக்காகச் செய்யப்படும் காரியங்களில் எவருடைய நிந்தனையையும் பொருட்படுத்தாமல் இருப்பது,
- இரண்டாவது, எந்த நற்காரியத்திலும் முகஸ்துதிக்கு இடம் கொடுக்காமல் இருப்பது,
- மூன்றாவது உலகம், மறுமை ஆகிய இரண்டு காரியம் எதிர்ப்பட்டால், அவற்றில் மறுமைக்குரிய காரியத்தையே தேர்ந்தெடுப்பது ஆகியவையாகும்.
– அபூதாவூத்
