இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

நபி(ஸல்) அவர்களது பெயரைக் கேட்டால் ஒவ்வொரு முஸ்லிமும் அன்னார்மீது ஸலவாத் கட்டாயம் சொல்லவேண்டும். இது குர்ஆன் ஹதீஸின் மூலம் நமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் – அல்லாஹ் அவர்கள் மீது கிருபையையும், சாந்தியையும் பொழிவானாக!

நபிமார்களை அவர்களது பெயரைக் கூறும்போது, மரியாதை கருதி அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் (அவர்கள் மீது ஸலாத்தும், ஸலாமும் உண்டாவதாக) என்றோ, அலைஹிஸ்ஸலாம் என்றோ கூற வேண்டும். வெறும் பெயரை அழைப்பது மரியாதைக் குறைவாகும்.

உதாரணமாக: ஹஜ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம்.

ஸஹாபாக்களை அவர்களது பெயர்களால் அழைக்கும் போது கண்ணியம் கருதி “ரலியல்லாஹு அன்ஹு” (இறைவன் அவர்களை பொருந்திக் கொள்வானாக) என்றும்,

ஸஹாபா பெண்களை “ரலியல்லாஹு அன்ஹா” என்றும் அழைக்க வேண்டும்.

இது அவர்களது தியாகத்திற்கு நாம் செய்யும் துஆவும், மரியாதையுமாகும்.

ஸஹாபாக்களுக்குப்பின் உள்ள தாபிஈன்கள், தபஉ தாபிஈன்கள், இறைநேசர்கள் போன்றோர்களை அழைக்கும் போது “ரஹிமஹuல்லாஹு” என்றோ “ரஹ்மத்துல்லாஹி அலைஹி” என்றோ கூறவேண்டும்.

இறைவனின் அருள் அவர்கள் மீது உண்டாகட்டும்! இறைவன் அவர்களுக்கு “ரஹ்மத்” புரிவானாக!

“குத்திஸ ஸிர்ருஹு” / “கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஜ்”

மகத்துவமிக்க அவர்களது ரகசியத்தை அல்லாஹ் பரிசுத்தப்படுத்தி வைப்பானாக என்றும் அழைக்கலாம்.

“மத்த ளிள்ளுஹு”

அவர்களது நிழலை (பலனை) அதிகப்படுத்தி வைப்பானாக.

”தாம்மத் பரக்காதுஹூம்”

அவர்களது பரக்கத்தை அல்லாஹ் நிலைபெறச் செய்வானாக என்றும் அழைக்கப்படுகிறது.

Share.

Get new Posts

க ரு த் து க ள் F E E D B A C K S