سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هُذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلى رَبِّنَا لَمُنْقَلِبُونَ
பொருள்:
எங்களுடைய சக்திக்கு வசப்படுத்த முடியாத இதை (இந்த வாகனத்தை) எங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்த அல்லாஹ்வை தூய்மைப் படுத்துகிறோம். மேலும் நாம் அனைவரும் நம் இரட்சகன்பால் மீளக்கூடியவர்களே!
பிறகு மூன்றுமுறை ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்றும், மூன்று முறை ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறியபின்,
سُبْحَانَكَ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
பொருள்:
யா அல்லாஹ்! உன்னைத் தூய்மையாக்குகிறேன். எனக்கு நான் தீங்கிழைத்துக் கொண்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக! பாவங்களை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை.
அதன்பின்,
اللَّهُمَّ إِنَّا نَسْتَلْكَ فِي سَفَرِنَا هَذَ الْبِيِّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُم هَوْنَ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَأَطُولَنَا بُعْدَةً اللهم أنتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ في الأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعَثَاءِ السَّفَرِ وَكَابَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ وَالْحَوْرِ بَعْدَ الْكَوْرِ وَدَعْوَتِ الْمَظْلُومِ
பொருள்:
யா அல்லாஹ்! நாங்கள் மேற்கொள்ளும் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும் நீ திருப்திபடக்கூடிய (நற்)செயலையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்குவாயாக. இதன் தொலைதூரத்தை எங்களுக்குச் சுருக்குவாயாக. இறைவா! நீயே என் பயணத் தோழனாகவும் (என்) குடும்பத்தின் பொறுப்பாளனாகவும் உள்ளாய்.
யா அல்லாஹ்! இப்பயணத்தின் சிரமங்களிலிருந்தும் நிலைகுலையச் செய்யும் துயரக் காட்சியிலிருந்தும் (என்) செல்வத்திலும் குடும்பத்திலும் ஏற்படும் தீய விளைவுகளிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும் எனது வீட்டாரிலும், பொருளிலும் பிரயாணத்திலிருந்து திரும்பிய பின்னர் நஷ்டத்தை பார்ப்பதை விட்டும், திருந்திய பிறகு கெடுவதை விட்டும், அநீதி இழைக்கப்பட்டவனின் சாபத்தை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
வாகனத்திலிருந்து இறங்கும் போது ஓதவேண்டிய துஆ:
رَبِّ أَنْزِلْنِي مُنْزَلًا مُبَارَكًا وَانْتَ خَيْرُ المُنْزِلِينَ
பொருள்:
இறைவா! பரக்கத்தான இறங்குதலாக இறக்கி வைப்பாயாக! இன்னும் இறக்கி வைப்பவர்களில் நீயே மேலானவன்.
பயணத்திலிருந்து திரும்பி ஊருக்குள் நுழையும்போது:
ايبُونَ ، تَائِبُونَ ، عَابِدُونَ ، لِرَبِّنَا حَامِدُونَ
பொருள்:
பாவமன்னிப்புக் கோரியவர்களாகவும், பாவ மீட்சி பெற்றவர்களாகவும் எங்கள் இறைவனை வழிபட்டவர்களாகவும், அவனையே போற்றிப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகிறோம்.
