இப்படி ஒரு காலம் வரும் என நபியவர்கள் அறிவித்த அடையாளங்கள்:
- நல்லவைகளைக் கெட்டவைகளாகவும், கெட்டவைகளை நல்லவைகளாகவும் கருதுவார்கள்.
- முஸ்லிம்களின் ஒற்றுமை குன்றி, வேற்றுமை வேரூன்றி நிற்கும்.
- பொறாமை அதிகமாகும்; இதனால் ஒரு மகன் தன் தகப்பன் மரணிப்பதை விரும்புவான்.
- மது அருந்தும் பழக்கம் பொதுவாகி விடும்.
- ஆண்கள் வெட்கப்படுவார்கள்; பெண்களிடம் நாணம் எடுபட்டுவிடும்.
- பெண்கள் ஆண்களை மிகைத்திருப்பார்கள்.
- யாசிப்போரை விரட்டுவார்கள்.
- நம்பகத்தன்மை இல்லாமல் ஆகிவிடும்.
- மஸ்ஜிதுகள் சண்டை சச்சரவுகள் நிறைந்த இடமாகக் காட்சி அளிக்கும்.
- அறிஞர்களிடம் உலக ஆதாயம் தோன்றிவிடும்.
- வட்டி, லஞ்சம் போன்றவை சாதாரண செயலாகக் கருதப்படும்.
- பெண், அந்நிய ஆண்களுக்கு மத்தியில் தன்னை அலங்கரித்துச் செல்வாள்.
- தர்மங்கள் விளம்பரம் செய்யப்படும்.
- நல்லொழுக்க சீலர்கள் இழிவாக நடத்தப்படுவார்கள்.
- செல்வத்தின் மூலம் மக்கள் மகிழ்ச்சி அடையமாட்டார்கள்.
- எங்கு நோக்கினும் குழப்பமும் புரட்சியும் பரவி நிற்கும்.
- குழப்பங்களால் முஃமின்களின் மனதில் ஈமான் நிலை குலைந்து விடும்.
- மக்கள் ஒருவரை ஒருவர் நம்ப மாட்டார்கள்.
- பாவங்கள் பிறரிடம் பெருமையாகப் பேசப்படும்.
- நீதி செலுத்துவோரிடம் நீதி இருக்காது.
- வான் பொழியாது; பூமி முளைக்காது.
- தர்க்கம் புரியவும், சொல்வன்மை காட்டவும் கல்வி பயில்வார்கள்.
- சிறியோர் பெரியோரை கண்ணியப்படுத்த மாட்டார்கள்.
- மஸ்ஜிதுகள் அலங்காரமாக கட்டப்படும்.
- விபச்சாரம் மலிந்துவிடும்.
- மது மக்களிடம் பொதுவாகி விடும்; அதை தீமை என்றே மக்கள் கருத மாட்டார்கள்.
- லஞ்சம் மலிந்துவிடும்.
- சிறுவர்கள் அறிஞர்களாக்கப்படுவது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்.
- பிறை பெரிதாகி மக்கள் முதல் பிறையைக் கண்டு, இது இரண்டாம் பிறையைப் போன்றிருக்கிறதே என்பார்கள்.
- ஒரு மனிதன் பள்ளிவாசலை கடந்து செல்வான்; ஆனால் அதிலே இரண்டு ரகஅத்கள் தொழ மாட்டான்.
- தனக்குத் தெரிந்தவர்களுக்கு மாத்திரமே ஸலாம் கூறுவான்.
- பருவ நிலைகள் மாறிவிடும்.
- கொலைகள் பெருகிவிடும்.
- நாணயம் பாழாக்கப்படும்.
- பூகம்பங்கள் அதிகரிக்கும்.
