நல்லோர்களின் தன்மைக்கு அடையாளமாக இருக்கக்கூடிய செயல்கள்:
- உலகின் மீது வெறுப்பும், மறுமையின் மீது விருப்பமும் இருத்தல்.
- வீண் பேச்சைவிட்டு விலகி இருத்தல்.
- குர்ஆன் திலாவத்தையும், திக்ரையும் நிறைவேற்றுதல்.
- தொழுகையை அதன் நேரத்தில் நிறைவேற்றுவது.
- சிறிய ஹராமாக இருந்தாலும் முற்றிலும் விலகி இருத்தல்.
- இறைவனை நேசிப்பவர்களின் சகவாசத்தில் இருப்பது.
- கொடையாளியாக இருப்பது.
- பணிவை மேற்கொண்டு அகம்பாவத்தை விட்டுவிடுதல்.
- இறைவனின் படைப்பினங்களிடம் கனிவு காட்டுவது.
- மரணத்தை மிகையாக நினைவு கூர்வது.
- படைப்பினங்களுக்கு நற்பலன் சேர்த்தல்.
தீய தன்மையுள்ளவர்களின் அடையாளங்கள்:
- செல்வத்தின் மீது பேராசை கொள்வது.
- உலக இன்பங்களிலும், மனோஇச்சைகளிலும் மூழ்கி இருப்பது.
- மானக்கேடான பேச்சுக்களைப் பேசுவது.
- அளவுக்கு அதிகமாகப் பேசுவது.
- தொழுகையில் சோம்பல் காட்டுவது.
- ஹராமான மேலும் சந்தேகத்திற்குண்டான பொருட்களை உண்பது.
- பாவமான காரியங்கள் செய்பவர்களிடம் சகவாசம் கொள்வது.
- தீய குணமுள்ளவனாக இருப்பது.
- ஆணவத்தோடும், தற்பெருமையுடனும் நடந்துகொள்வது.
- மக்களுக்கு நல்லது செய்வதிலிருந்து விலகி இருப்பது.
- கஞ்சத்தனமாக இருப்பது.
- மரணத்தை மறந்திருப்பது.
