- தொழுகையில் வேண்டுமென்றோ, மறதியாகவோ சாப்பிடுதல், குடித்தல், பேசுதல்.
- தன் தொழுகையின் முழு கவனத்தையும் தவறவிட்டு பிறரின் செயலை அல்லது வேறு விஷயங்களை வேடிக்கை பார்த்தல்.
- வேறொருவர் தும்மியதற்காக இவர் ‘யர்ஹமுகல்லாஹ்’ என்று பதில் கூறுதல்.
- குர்ஆன் ஆயத்துகளை அர்த்தம் மாறும்படியாக ஓதுதல்.
- குர்ஆனைத் தொழுகையில் பார்த்து ஓதுதல்.
- சப்தமிட்டுச் சிரிப்பது.
- உலகக் கவலையால் சப்தமிட்டு அழுவது.
- பிறர் ஸலாமுக்குத் தொழுகையில் மறுமொழியாக பதில் கூறுவது.
- சந்தோஷம், துக்கம், ஆச்சரியமான விஷயங்களை தொழுகையிலேயே கேட்டு அதற்கு ‘சுப்ஹானல்லாஹ்’, ‘அல்ஹம்துலில்லாஹ்’, ‘இன்னாலில்லாஹ்’ போன்ற வார்த்தைகளை கூறுதல்.
- ஸுஜூதில் நெற்றி படாமலிருத்தல். (ஸஜ்தாவில் ஏழு உறுப்புகள் தரையில் படவேண்டும். இரண்டு கால் விரல்கள், இரண்டு முழங்கால், இரண்டு கைகள், நெற்றியும் மூக்கும் இவைகளில் ஒன்று தரையில் படாவிட்டாலும் ஸஜ்தா கூடாது. ஸஜ்தா கூடாவிட்டால் தொழுகை கூடாது.)
- இமாமை விட முந்தி நிற்பவது.
- தனது நெஞ்சைக் கிப்லாவை விட்டுத் திருப்புதல்.
- மனிதர்களின் பேச்சுக்கு ஒப்பான துஆவை தொழுகையில் ஓதுதல்.
- தொழுதுகொண்டிருக்கும்போது சூரியன் உதயமாகிவிடுதல்.
- தொழுது கொண்டிருக்கும்போது ஒளு முறிந்து விடுதல்.
- பர்ளான காரியங்களை விட்டு விடுதல். வாஜிபை விட்டுவிட்டு ஸஜ்தா ஸஹ்வு செய்யாமல் மறந்து விடுதல்.
