இமாம் ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்களின் மகன் முஹம்மத் (ரஹ்) கூறுகிறார்கள்:
எனது தந்தை ஐந்து வகையான மனிதர்களோடு எப்பொழுதும் சேராதே என்று எனக்கு வஸிய்யத் – மரண சாசனம் செய்துள்ளார்கள்:
- முதலாமவன்: பாவி; இவன் ஒரு கவள அளவு உணவைவிடக் குறைவான பொருளுக்கு உன்னை விற்கவும் தயங்கமாட்டான்.
- இரண்டாமவன்: கஞ்சன்; உனக்கு மிகத்தேவையான பொருளைக் கூட உன்னைவிட்டும் பிரிக்கத் தயங்க மாட்டான்.
- மூன்றாமவன்: பொய்யன்; அருகில் உள்ளதை உன்னை விட்டும் தூரமாக்குவான்; தூரமானவற்றைச் சமீபமாக்கிக் காட்டுவான்.
- நான்காமவன்: மடையன்; இவன் உனக்கு உதவ நினைப்பான்; ஆனால், முடிவு மோசமானதாகிவிடும்.
- ஐந்தாமவன்: உறவை முறித்து உறவினர்களுக்கு துன்பம் தருபவன்; இவன் இறைவேதத்தில் மூன்று இடங்களில் சபிக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளேன்.
