இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
  • இஸ்லாம் என்பது உன் ஆத்மா அமைதி பெறுவதற்கும், பிறர் உன் மூலம் அமைதி பெறவும் ஆகும்.
  • திக்ருடைய மஜ்லிஸ்களில் கலந்து கொள்வதால் மனம் கடினத் தன்மையை விட்டு நீங்கும்.
  • அல்லாஹ்வின் நேசர்களுடன் பகைமை கொள்வதை விட்டும் பயந்து கொள்ள வேண்டும்.
  • தன்னுடைய செயல் தவறானது என தெரிந்தும், அதன்மீது வெறுப்பு கொண்டு நீக்கிக் கொள்ளாதவன், தவ்பா நசீபை இழக்கிறான்.
  • யாருக்கேனும் தஹஜ்ஜுத் தொழுகை தவறிவிட்டால், அவர் நேற்றைய பொழுதில் ஏதோ பாவம் செய்திருக்கிறார் என பொருள்.
  • தஹஜ்ஜுத் தொழுகை அல்லாஹ், தான் நேசிப்பவர்களுக்கே வழங்குகிறான்.
  • தற்பெருமை, பொறாமை இரண்டு பாவங்களுமே இப்லீசை சுவனத்திலிருந்து வெளியேற்றியது. ஆதமின் மக்கள் இவ்விரண்டு பாவங்களை விட்டு அகன்றாலே ஒழிய சுவனம் நுழையமுடியாது.
  • நல்ல அமல்கள் செய்துவிட்டபின், அவை அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமே என கவலை கொள்பவன் மனத்தூய்மை பெறுவான்.
  • பிறரிடம் புகழை எதிர்பார்த்து ஒரு நற்காரியம் செய்வதும், பிறர் இகழ்வார்களே என நற்காரியத்தை விடுவதும் அல்லாஹ்விடம் பெரும் பாவங்களாகும்.
  • நபியவர்களின் ஒரு சுன்னத்தை தவற விடுவது, மறுமையின் நற்பேறுகளில் பெரும் நஷ்டம் ஏற்படும்.
  • தேவையற்ற பேச்சுக்கள் மூலமே ஷைத்தான் மனிதனிடம் ஆதிக்கம் பெறுகிறான். ஆகவே, மௌனத்தை அதிகம் கடைபிடிப்பது ஷைத்தானை வெற்றி கொள்ள உதவுகிறது.
Share.

Get new Posts

க ரு த் து க ள் F E E D B A C K S