இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ

ஈமான் கொண்டவர்களே, உங்களுக்கு நாம் அளித்தவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்.

– சூரா அல்பகரா : 172

சந்தேகத்திற்குரிய பொருளை உண்ணாமல் இருப்பதே, ஈமானின் அழகாகும். இதுதான், ஒரு முஸ்லிம் உணவு விஷயத்தில் இருக்கவேண்டிய பேணுதலாகும்.

ஒருமுறை ஒரு ஸஹாபாப்பெண்மணி நபி(ஸல்) அவர்களையும், அவர்களது தோழர்களையும் தம்வீட்டிற்கு விருந்துண்ண வருமாறு அழைப்பு விடுத்தார்.

நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் அவ்வீட்டிற்குச் சென்றனர். நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் உணவு கொண்டுவந்து வைக்கப்பட்டது. அண்ணலார் அவர்கள் அதிலிருந்து ஒரு கவளத்தை வாயில் வைத்து, பிறகு துப்பிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அவ்வீட்டுப் பெண்மணியிடம், “இந்த ஆட்டிறைச்சி அதன் உரிமையாளரின் அனுமதியின்றி கொண்டுவந்து சமைக்கப் பட்டதுபோல் தெரிகிறதே!” என்றார்கள்.

அதற்கு அப்பெண், “யாரஸூலல்லாஹ்! ஆடு வாங்கிவர ஆட்டு மந்தைக்கு ஆளனுப்பினேன். அங்கு ஆடு கிடைக்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரரிடம் ஒரு ஆடு இருந்தது. நான் அதனை விலைக்கு வாங்கிவர ஆளனுப்பினேன். அவர் வீட்டில் இல்லை. ஆனால் அவருடைய மனைவி ஆட்டை என்னிடம் அனுப்பிவைத்துவிட்டார். நான் அதனை அறுத்துச் சமைத்து வைத்தேன்” என்று பதிலளித்தார்.

இதனைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அந்த உணவை உண்ணாமல் தவிர்த்து விட்டார்கள்.

இங்கு கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், பக்கத்துவீட்டுப் பெண் தன் கணவர் அனுமதியின்றி, ஆட்டை இவருக்குக் கொடுத்துவிட்டார். ஆட்டிற்குச் சொந்தக்காரர் (கணவர்) இதனைக் குறித்து அறியவில்லை. மேலும், அவர் அதற்கான கிரையமும் பெறவில்லை. அவரின் அனுமதியின்றி ஆடு சமைக்கப்பட்டதால், அதனை நபி(ஸல்) அவர்கள் உண்ணவில்லை.

பொருளுக்கு அதன் உரிமை உடையவரிடம் அனுமதி பெறப்படாமல் பயன்படுத்துவது ஹலால் ஆகாது.

Share.

Get new Posts

க ரு த் து க ள் F E E D B A C K S