உலகப்பிரசித்தி பெற்ற குலிஸ்தான் என்ற நூலை இயற்றிய ஷேக் சஅதி (ரஹ்) அவர்கள் தம்மைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறார்கள்:
ஒரு நாள் தஹஜ்ஜுத் நேரத்தில் எழுந்து குர்ஆனை ஓதிக் கொண்டிருந்தேன். எனது தந்தையார் திக்ரில் ஈடுபட்டிருந்தார். எனது குடும்பத்தவர்கள் அப்போது உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் உறங்கியதைப் பார்த்து என் மனதில் எனக்குப் பெருமை உண்டாயிற்று.
எனது தந்தையாரிடம், ‘இவர்கள் இபாதத் செய்யும் ஆசையில்லாமல் இப்படிப் பிணத்தைப் போல் தூங்கிக் கொண்டிருக்கிறர்களே’ என்று கூறினேன்.
எனது இந்தப் பேச்சினால் கோபமுற்ற என் தந்தை என்னிடம்: ‘பிறரிடம் குறை காண்பதற்காகத் தான் நீ அதிகாலையில் கண் விழிக்கிறாய் என்றால் நீயும் அவர்களைப் போல் தூங்கிவிடுவதே மேல்!’ என்று என்னைக் கண்டித்தார்கள்.
