இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

ல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் :

“எவர் ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து அதன் தொடர்ச்சியாக ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்கிறாரோ, அவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவராவார்.”

— முஸ்லிம்

நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:

“ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, இரண்டு ரகஅத் ளுஹா தொழுவது மற்றும் தூங்கச்செல்லும் முன் வித்ருத் தொழுவது என்ற மூன்று விஷயங்களை எனது நேசராகிய நபி(ஸல்) அவர்கள் எனக்கு வஸிய்யத் செய்தார்கள்.”

— புகாரி

ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு வைப்பது முஸ்தஹப்பாகும்.

ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:

“எனக்கு மூன்று விஷயங்களை எனது நேசர் உபதேசம் செய்தார்கள். நான் மரணிக்கும்வரை அதை கைவிடவேமாட்டேன். ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பது, ளுஹா தொழுவது, வித்ரு தொழாதவரை தூங்காமலிருப்பது.”

— முஸ்லிம்

ஒவ்வொரு மாதமும் பிறை 13, 14, 15 ஆகிய மூன்று தினங்கள் நோன்பு நோற்பது முஸ்தஹப்பு.

நபிலான நோன்பு வைக்கும் முன் கணவனின் அனுமதியை, மனைவி கட்டாயம் பெறவேண்டும்.

இந்த மூன்று நோன்புகளுக்குத்தான் “அய்யாமுல் பீழ்” நோன்பு என்று அழைக்கப்படும்.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version