இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்:

يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்றே உங்கள் மீதும் நோன்பு நோற்பது கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் இறையச்சமுடையவர் ஆகலாம்.

— சூரா அல்பகரா : 183

ரமலான் மாதம் எல்லா மாதங்களையும்விட சிறந்ததாக உள்ளது. எல்லா நற்காரியங்களும் மற்ற மாதங்களை விட இம்மாதத்திலேயே அதிகமாக நிறைவேற்றப்படுகின்றன.

நபி(ஸல்) அவர்கள் ஷஃபான் மாத இறுதியில் ஸஹாபாக்களுக்குச் செய்த உபதேசம்: “மனிதர்களே! உங்களுக்கு ஒரு மகத்தான மாதம் (ரமலான்) வந்திருக்கிறது. அது பரக்கத் செய்யப்பட்ட மாதமாகும். அதில் ‘லைலத்துல் கத்ர்’ என்ற ஓர் இரவு இருக்கிறது. அது ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது. இம்மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். அதன் இரவு நேரங்களில் தொழுவதை நன்மைக்குரிய செயலாக ஆக்கியுள்ளான். எம்மனிதர் ரமலான் மாதத்தில் ஒரு நற்செயலைச் செய்து அல்லாஹ்விடம் நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்கிறாரோ, அவர் ரமலான் அல்லாத மற்ற மாதங்களில் ஒரு பர்ளை நிறைவேற்றியவர் போன்றவராவார்.”

“ரமலான் மாதத்தில் ஏதேனும் ஒரு பர்ளை நிறைவேற்றுபவர், ரமலான் அல்லாத மாதங்களில் எழுபது பர்ளுகளை நிறைவேற்றியவர் போன்றவராவார்.”

நோன்பு என்பது முகஸ்துதி இல்லாத மனத்தூய்மை பெற்ற அமலாக இருக்கிறது. நோன்பு இறைவனுக்காகவே ஆகிவிடுவதால், அல்லாஹ்வின் அன்பு அடியானின் மீது அதிகமாகிவிடுகிறது. இதனால் கூலியும் அதிகம் வழங்குகிறான்.

எவர் ரமலான் மாதத்தில் நன்மையை மட்டும் நாடி அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்ட நிலையில் நோன்பை நோற்பாரோ, அவரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

மனோ இச்சைகளைக் கைவிடுதல், உண்ணும் நேரம் மாற்றி அமைத்து அதில் வரும் சிரமங்களைத் தாங்கிக்கொள்ளுதல், பசித்திருத்தல், அதிகமாக குர்ஆன் ஓதப்படுதல், திக்ரு செய்தல், ஜகாத், ஸதகா போன்ற தர்மங்கள் நிறைவேற்றப்படுவது.


நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

“நோன்பு இறைநம்பிக்கையாளர்களுக்காக பரிந்துரை செய்யும். நோன்பு கூறும்: ‘என் இறைவா! நான் இந்த மனிதனைப் பகல் முழுவதும் உண்பதிலிருந்தும் பிற இன்பங்களிலிருந்தும் தடுத்தேன். அவனும் அவற்றிலிருந்து விலகியிருந்தான். எனவே என் இறைவா! இந்த மனிதனின் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்றுக்கொள்!’ அல்லாஹ் இப்பரிந்துரையை ஏற்றுக்கொள்வான்.” — மிஷ்காத்

இன்னும் இரவு நேரங்களில் இருபது ரகஅத் தராவீஹ், தஹஜ்ஜுத் போன்ற சுன்னத்தான தொழுகைகள் தொழுதல். மேலும், விருந்தளித்தல், ஏழைகளுக்கு தர்மம் செய்தல் போன்ற எல்லா வகையான நற்செயல்களும் எல்லா முஸ்லிம்களும் ஒரே மாதிரியாக உலகம் முழுவதும் நிறைவேற்றப்படுவது இந்த ரமலான் மாதத்தில்தான்.

இறைவனின் கட்டளைக்கேற்ப எந்த நாட்டைச் சேர்ந்த முஸ்லிமாக இருந்தாலும் சூரிய உதயத்திற்கு முன்பிருந்து சூரிய அஸ்தமனம் வரை யாதொன்றையும் உட்கொள்ளாது பசித்திருந்து நோன்பு நோற்கவேண்டும்.

ஏழையின் பசியை மனிதர்களுக்கு நோன்பின் மூலம் உணர்த்தப்படுகிறது. மேலும் ‘தக்வா’ என்னும் பயபக்தி நோன்பின் மூலமாகவே கிடைக்கச் செய்யும்.

அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான் :

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ ۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ

ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேரான பாதையைத் தெளிவாக்கக் கூடியதாகவும், நன்மை தீமைகளைப் பிரித்துக் காட்டக்கூடியதாகவும் உள்ள குர்ஆன் இறக்கி அருளப்பெற்றது. எனவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அதில் நோன்பு நோற்க வேண்டும்.

— சூரா அல்பகரா : 185

ரமலான் மாத நோன்பின் மூலமாக மனிதனின் மனோ இச்சை கட்டுப்படுத்தப்படுகிறது; ரமலானின் நோன்பு நம் ஆத்மாவைத் தூய்மைப்படுத்துகிறது.

நோன்பு நோற்பதும், நோன்பு திறப்பதும் நேர்மையான வழியில் சம்பாதித்த உணவாக இருக்க வேண்டும் என்பது நோன்பின் முக்கியமான நிபந்தனையாகும்.

இம்மாதத்தில் இறைவன் அதிகமானோரை மன்னிக்கிறான். கடந்த காலத்தில் நிகழ்ந்த பாவங்களுக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பைப் பெறவும், இனி உள்ள வயதில் பாவங்கள் செய்யாமலிருக்க உறுதி கொள்ளவும் உள்ள மாதமே ரமலான் மாதமாகும்.

புனிதம் நிறைந்த ரமலானின் நோன்பை நோற்பவர் முன்செய்த தனது பாவங்கள் மன்னிக்கப்பட்டவராக ஆகிவிடுகிறார் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

— புகாரி

ரமலானை வரவேற்போம்… நம் நற்செயல்களைக் கொண்டு ரமலானைச் சங்கை செய்வோம்! அல்லாஹ் நம் அனைவருக்கும் ரமலானின் அபிவிருத்தியை வழங்குவானாக! ஆமீன்!

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version