இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

நமது குழந்தைகளின் இம்மை, மறுமையின் நல்வாழ்விற்கும், சுகத்திற்கும் நாம் செய்யும் தர்மமே ‘அகீகா’.

இது நபி(ஸல்) அவர்களது வழிமுறையாகும்.

நபி(ஸல்) அவர்கள் தங்களது பேரக்குழந்தைகள் இமாம் ஹஸன் (ரலி), இமாம் ஹூஸைன் (ரலி) ஆகிய இருவருக்கும் ‘அகீகா’ கொடுத்துள்ளார்கள்.

குழந்தைகள் பிறந்தவுடன் ஆண் குழந்தை எனில் இரண்டுஆடுகளும், பெண்குழந்தை எனில் ஒரு ஆடும் ‘அகீகா’ தரவேண்டும்.

‘அகீகா’வும் குர்பானி போன்றுதான் ஒரு வயது பூர்த்தியான ஆடு கொடுக்க வேண்டும். இறைச்சியை மூன்று பங்காக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

  1. தனக்காக 2. உறவினர்களுக்காக 3. ஏழை மிஸ்கீன்களுக்காக.

‘அகீகா’ கறியைப் பெற்றோர் தாராளமாக சாப்பிடலாம். எந்த தவறும் இல்லை, குழந்தைக்காகக் கொடுத்த அகீகாவை எப்படிச் சாப்பிடுவது? எனத் தேவையற்ற சந்தேகங்களை தவிர்த்துக் கொள்ளவேண்டும். குர்பானி கறி போன்று நாமும் சாப்பிடலாம்.

‘அகீகா’ குழந்தை பிறந்த 7-ம் நாளே தந்துவிட வேண்டும். தவறினால் தாமதம் செய்யாமல் விரைவில் தந்து விடவேண்டும்.

ஹலாலான பணத்தைக்கொண்டே ‘அகீகா’ நிறைவேற்றப்பட வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் உடையவர்கள் ஒரே நேரத்தில் ‘அகீகா’ கொடுக்க முடியா விட்டாலும் ஒவ்வொரு குழந்தைக்காக கொடுத்து வரலாம்.

‘அகீகா’ வின் இறைச்சியில் உணவுகள் செய்து ஏழை மிஸ்கீன்களுக்கும் கொடுப்பது மிகச்சிறந்த தர்மமாகும். ‘யா அல்லாஹ்! எனது குழந்தையின் இம்மை, மறுமை வாழ்வு ஸலாமத்தாக அமைய இந்தப் பிராணியை, அகீகா தருகிறேன்’ என நிய்யத் செய்து ‘பிஸ்மில்லாஹி அல்லாஹூ அக்பர்’ எனக்கூறி ஆட்டை அறுக்கவேண்டும்.

ஆட்டுத்தோலை அல்லது விற்ற அதன் கிரயத்தைத் தர்மம் செய்து விடவேண்டும்.

அகீகா கொடுப்பது சுன்னத் என்னும் நபிவழியாகும்.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version