இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

ஒரு மனிதனின் வார்த்தைகள், அவற்றைப் பயன்படுத்தும் பாங்கு, அதன் ஒழுக்கங்கள் ஆகியவற்றிற்கு அல்லாஹ்விடம் சிறப்புகள் உள்ளது போல் தவறாகப் பயன்படுத்தினால் தண்டிப்பும் உள்ளது.

மாமேதை ஹஜ்ரத் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களிடம், ஒருவர் வந்து, “தங்களின் தகப்பனார் இறந்துவிட்டாரல்லவா?” என்று கேட்டார். “ஆம்” என்று இமாம் அவர்கள் பதிலளித்தார்கள்.

“உங்கள் தாயார் உயிரோடுதானே இருக்கிறார்” என்று மீண்டும் வினவினார். ”ஆம்” என இமாம் அவர்கள் பதிலளித்தார்கள்.

“உங்களின் தாயார் பேரழகி என்று நான் கேள்விப்பட்டேன். நான் உங்களின் தாயாரை மணந்துகொள்ள விரும்புகிறேன். நீங்கள் உங்கள் தாயாரிடம் பேசி, திருமணத்தை நடத்தி வைக்கமுடியுமா?” என்று அம்மனிதர் பண்பற்ற முறையில் இமாம் அவர்களிடம் கேட்டார்.

அதற்கு இமாம் அவர்கள் பண்பற்ற முறையில் வார்த்தைகளை வெளிவிடாமல் நிதானமாக, “என் தாயார் அவர்கள் நிறைந்த அறிவு பெற்றவர்கள். அவர்களுக்கு மறுமணம் செய்துகொள்ளும் உரிமை இருக்கிறது. ஆனால், நான் அவர்களிடம் இதுகுறித்து வற்புறுத்த முடியாது. எனினும், தாங்கள் கூறியது சம்பந்தமாக என் தாயாரிடம் இதோ விபரம் கேட்டு வருகிறேன்” என்று கூறி இமாம் அவர்கள் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டார்கள்.

இமாம் அவர்கள் சிறிது தூரம் சென்றதும், பெரும் சப்தம் ஒன்று அவர்களின் பின்னால் கேட்டது. திரும்பிப் பார்த்தார்கள்.

அம்மனிதன் சப்தமிட்டு அலறி அவ்விடத்திலேயே துடிதுடித்து இறந்துவிட்டான்.

அப்போது இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள், “அபூஹனீபாவின் பொறுமை இந்த மனிதரின் உயிரை வாங்கிவிட்டது” என்று கூறினார்கள்.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version