இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

சொல் வெல்லுமா? கொல்லுமா? எனத் தெரியாது பேசிவிடுகிறோம்.

மனிதனின் தவறுகளில் பெரும்பாலானவை நாவிலிருந்தே உண்டாகின்றன என்பது நபி(ஸல்) அவர்களின் அருள்மொழி.

நாவு நன்மையையும் உண்டாக்கும்; நாசத்தையும் உண்டாக்கும்.

உடலின் அனைத்து பாகங்களும் எல்லையோடு இயங்கும் நாவைத் தவிர…

நாவின் சுழற்சி புயலைவிட வலிமை மிகுந்தது.

நாவு சிந்தும் ஒரு வார்த்தை ஒரு நாட்டையே சிதைத்துவிடும். நமக்கு வரும் அனைத்து இன்னல்களும் கஷ்டங்களும் நாவால் பிறந்ததே!

ஒரு மனிதன் பலருக்கு மத்தியில் அவமானம் அடைகிறான் என்றால் அதற்கு காரணம் அவன் நாவுதான்.

மனம் நினைப்பதையெல்லாம் பேச்சாக வெளிப்படுத்திவிட்டால் அது நம்மையும் நிம்மதி இழக்கச் செய்து விடும். பிறரையும் நிம்மதி இழக்கச் செய்து விடும்.

பேசும்முன் எதைப் பேசப் போகிறோம்; இதனால் விளையப் போகும் நன்மை தீமை என்ன? என ஒரு விநாடி யோசித்துவிட்டுப் பேசினால் எல்லோரும் நிம்மதி பெறுவர்.

கோபத்தைத் தவிர்க்க இயலாது; ஆனால் கோபத்தின் போது வார்த்தைகளை வெளிவிடாமல் தவிர்க்கலாம். ஏனெனில், கோபத்தில் பிறக்கும் வார்த்தைகளுக்கு வீரியம் அதிகம். ஆகவே, கோபத்தின் போது மௌனமாகி விட வேண்டும்.

கோபத்தில் மௌனமாகிவிடுவது சான்றோர்களின் பண்பு.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version