இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

நபித்தோழர் அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள்; வீடுகளில் அவர்கள் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே, நபி(ஸல்) அவர்களுடைய தோழர்கள் இது குறித்து நபியவர்களிடம் கேட்டனர்.

அப்போது,

وَ يَسْتَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي المُحِيضِ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّ يَطْهُرْنَ

‘(நபியே!) அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள்; அது ஓர் (இயற்கை) உபாதை’ என்று நீர் கூறுவீராக! எனவே, மாதவிடாய் காலத்தில் பெண்களை விட்டு விலகி அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களை (உடலுறவுக்காக) அணுகாதீர்கள்; என்று தொடங்கும் (2:222ஆவது) வசனத்தை அல்லாஹ் இறக்கினான்.

— சூரா அல் பகரா : 222

அதையடுத்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ‘தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்து கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.

இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது, ‘நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது விருப்பம்’ என்று கூறிக்கொண்டனர்.

எனவே உசைத் பின் ஹுளைர் (ரலி), அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோர் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் இன்னின்னவாறு கூறுகின்றனர். எனவே, (மாதவிடாய் ஏற்பட்டுள்ள) பெண்களுடன் நாமும் ஒட்டி உறவாடாமல் இருந்தாலென்ன?’ என்று கேட்டனர்.

இதைக் கேட்டதும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறிவிட்டது. ஆகவே, (கேள்வி கேட்ட) அவர்கள் இருவர் மீதும் நபியவர்களுக்குக் கோபம் ஏற்பட்டுவிட்டதோ என்று நாங்கள் எண்ணினோம்.

நபி(ஸல்) அவர்களது மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நான் ஏதேனும் பானத்தைப் பருகிவிட்டு அதை நபி(ஸல்) அவர்களிடம் கொடுப்பேன்; அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் ஏற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எழுப்புத் துண்டைக் கடித்துவிட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வைத்துப் புசிப்பார்கள்.

ஆகவே, பெண்கள் மாதவிடாயின் போது தொழுகை, குர்ஆனை தொடுதல் போன்ற வணக்கங்களை விட்டு தவிர்ந்து இருக்க வேண்டுமே தவிர அவர்களை வீட்டாரை விட்டுத் தனிமைப் படுத்த வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version