இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பெண்கள் சம்பந்தமான கூறியுள்ள எச்சரிக்கைகள்:

கணவனின் அதிகாரம் எப்போது மனைவியிடம் அடகு வைக்கப்படுமோ அக்காலத்தில் பஞ்சம் தோன்றும்.

இறைவழியில் நடந்திட கணவனுக்கு உதவிதிடும் இறை நம்பிக்கையுள்ள மனைவியே பெண்களில் சிறந்தவள்.

— திர்மிதி

பெண்கள் மறைவில் இருக்கவேண்டியவர்கள். ஏனெனில் பெண்கள் வெளியில் சென்றால் ஷைத்தான் அவர்களை (பிறருக்கு) அழகுப்படுத்திக் காட்டுகிறான்.

— திர்மிதி

ஒரு பெண்ணிடம் மறுமை நாளில், முதன்முதலாக அவளது தொழுகையைப் பற்றியும், அடுத்ததாக அவள் கணவனிடம் நடந்து கொண்ட முறையைப் பற்றியுமே விசாரிக்கப்படும்.

— ஹழ்ரத் இப்னு மஸ்வூத் (ரலி)

ஒரு பெண் எந்தத் தேவையுமில்லாமல் தன் கணவனிடம் (தலாக்) மணவிலக்கு கேட்டால் அவள் சுவனத்தின் வாசனையைக் கூட நுகரமாட்டாள்.

— அபூதாவூத்

ஒரு பெண் தன் கணவனால் இயன்ற அளவு தனக்குத் தரப்படும் உணவு, உடை கொஞ்சமாக இருப்பினும், அதைக் கொண்டு அவள் திருப்தி கொள்ளவில்லையென்றால் அல்லாஹ்வும் அவளைக் கொண்டு திருப்தியுறமாட்டான்.

— ஸஈது (ரலி)

எந்த ஒரு பெண் தன் கணவனுக்கு கோபம் வரக்கூடிய பேச்சுகளைப் பேசி அவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறாளோ, அவள் மீது நான் வெறுப்படைகிறேன். மேலும், மறுமை நாளில் அவளை நான் ரஹ்மத்துடைய பார்வையால் பார்க்க மாட்டேன் என்று அல்லாஹுதஆலா கூறியதாக, நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version