இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த மன்னன் ஆவார்.

இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரள மாநிலம் இருந்தது. அப்போது சேர நாடு அரேபியர்களுடன் வியாபார கப்பல் தொடர்பைக் கொண்டிருந்தது. பல்வேறு கிறித்துவ, யூத மதத்தின் ஐரோப்பியர்களும் அப்போது சேர நாட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

மக்காவில் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை அறிமுகம் செய்திருந்தனர். அந்த சமயத்தில் கேரளாவில் ஒருநாள் இரவு தனது மாளிகையில் பவுர்ணமி நிலவை ரசித்துக் கொண்டிருந்த சேரமான் பெருமாள், திடீரென்று நிலவு இரண்டாகப் பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார்.

இந்த அதிசய நிகழ்வைப் பற்றி அவர் பலரிடமும் விசாரித்தார். ஆனால் அதற்கான காரணம் அவருக்குக் கிடைக்காமல் இருந்தது.

இந்நிலையில் அப்போது சேர துறைமுகத்திற்கு வாணிபத்திற்காக வந்த அரேபியர் கூட்டம் ஒன்று அது பற்றித் தங்களுக்குத் தெரியும் என கூறியதைக் கேட்டு, அவர்களைத் தனது அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார்.

அப்போது அவர்கள் தங்கள் நாட்டில் (மக்காவில்) இறைத்தூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும், அவரது பெயர் முஹம்மது (ஸல்) எனவும், அவரே இறைமறுப்பாளர்களை நம்ப வைப்பதற்காக இந்த ‘நிலவைப் பிரிக்கும் அதிசயத்தை நடத்தியதாகக் கூறினர்.

இதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள் அந்த அரேபியர்களிடம், முஹம்மது நபி(ஸல்) அவர்களை தான் சந்திக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் தன்னையும் மக்காவுக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டார்.

அரேபியர்கள் அதனை ஒப்புக்கொண்டு கேரள மன்னர் சேரபெருமாளை தங்களோடு அழைத்துச் சென்றனர். அவ்வாறு பிரயாணம் புறப்படும் முன், தனது அரசைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்த சேரமான் பெருமாள் அதைத் தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொடுத்தார். (அதில் ஒரு பிரிவினர் ‘கொச்சின் ராயல் பேமிலி’ என்ற பெயரில் இன்றளவும் கேரளாவில் வாழ்ந்து வருகின்றனர்).

அதன் பிறகு சேரமான் பெருமாள், அரேபிய கூட்டத்தாருடன் மக்கா புறப்பட்டுச் சென்றார்.

மக்கா நகர் சென்று முஹம்மது நபி(ஸல்) அவர்களை நேரில் சந்தித்த சேரமான் பெருமாள் அங்கேயே இஸ்லாம் மார்க்கத்தை தழுவினார். தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார்.

முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு, தான் கொண்டுவந்த ஊறுகாயை அன்பளிப்பாகக் கொடுத்தார். இதை நபித்தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் கூறியதாக ஹக்கிம் என்பவர் தனது நூலான அல் முஸ்தராக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார்:

ஹிந்த் பகுதியிலிருந்து, முஹம்மது நபி(ஸல்) அவர்களை பார்க்க வந்திருந்த ஒரு மன்னர் ஒரு கலன் நிறைய ஊறுகாய்களைக் கொண்டு வந்திருந்தார். அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது. அதை நபி(ஸல்) அவர்கள் தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது.

அதன்பிறகு இஸ்லாமிய மார்க்கத்தை, கேரளாவில் இருக்கும் தம் குடும்பத்தாருக்கும் உறவினருக்கும் எத்தி வைக்க, நபித் தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் சிலரை அழைத்துக் கொண்டு ஓமான் வழியாக நாடு திரும்பினார்.

ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலாலா துறைமுகத்தில் (Salalah Port, Oman) நோய் வாய்ப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

சேர பெருமாள் என்ற தாஜுத்தீன் அவர்களின் மகனாரின் கப்ரு ஷரீபும் அங்கேயே அமைந்துள்ளது.

மாலிக் பின் தீனார் (ரலி) குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தைச் சந்தித்த அவர்கள் சேரமான் பெருமாள் இறப்பதற்கு முன்பு தன் குடும்பத்தாருக்கு எழுதி இருந்த கடிதத்தைக் கொடுத்தனர்.

அதில் சேரமான் பெருமாள், இஸ்லாமிய மார்க்கத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனாருக்கு உதவுமாறும் அதற்காகப் பல மசூதிகளைக் கட்டுமாறும் தன் குடும்பத்தாருக்குப் பணித்திருந்தார். அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்புவதற்கும், மசூதிகளைக் கட்டுவதற்கும் மாலிக் பின் தீனார்(ரலி) அவர்களுக்கு உதவியது.

அதன் பேரில் மாலிக் பின் தீனார் (ரலி) கி.பி 612-ல் கேரளாவின் கொடுங்கலூரில் முதல் மசூதியைக் கட்டினார். அதன் பிறகு மேலும் பல மசூதிகளை வட கேரளம் மற்றும் காசர்கோடு பகுதிகளிலும் கட்டினார்.

சேரமான் பெருமாள் என்பவரே இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியர் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version