இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

நல்லோர்களின் தன்மைக்கு அடையாளமாக இருக்கக்கூடிய செயல்கள்:

  • உலகின் மீது வெறுப்பும், மறுமையின் மீது விருப்பமும் இருத்தல்.
  • வீண் பேச்சைவிட்டு விலகி இருத்தல்.
  • குர்ஆன் திலாவத்தையும், திக்ரையும் நிறைவேற்றுதல்.
  • தொழுகையை அதன் நேரத்தில் நிறைவேற்றுவது.
  • சிறிய ஹராமாக இருந்தாலும் முற்றிலும் விலகி இருத்தல்.
  • இறைவனை நேசிப்பவர்களின் சகவாசத்தில் இருப்பது.
  • கொடையாளியாக இருப்பது.
  • பணிவை மேற்கொண்டு அகம்பாவத்தை விட்டுவிடுதல்.
  • இறைவனின் படைப்பினங்களிடம் கனிவு காட்டுவது.
  • மரணத்தை மிகையாக நினைவு கூர்வது.
  • படைப்பினங்களுக்கு நற்பலன் சேர்த்தல்.

தீய தன்மையுள்ளவர்களின் அடையாளங்கள்:

  • செல்வத்தின் மீது பேராசை கொள்வது.
  • உலக இன்பங்களிலும், மனோஇச்சைகளிலும் மூழ்கி இருப்பது.
  • மானக்கேடான பேச்சுக்களைப் பேசுவது.
  • அளவுக்கு அதிகமாகப் பேசுவது.
  • தொழுகையில் சோம்பல் காட்டுவது.
  • ஹராமான மேலும் சந்தேகத்திற்குண்டான பொருட்களை உண்பது.
  • பாவமான காரியங்கள் செய்பவர்களிடம் சகவாசம் கொள்வது.
  • தீய குணமுள்ளவனாக இருப்பது.
  • ஆணவத்தோடும், தற்பெருமையுடனும் நடந்துகொள்வது.
  • மக்களுக்கு நல்லது செய்வதிலிருந்து விலகி இருப்பது.
  • கஞ்சத்தனமாக இருப்பது.
  • மரணத்தை மறந்திருப்பது.
Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version