- ஒட்டுமுடி (சவரி முடி) அணியக் கூடாது.
- நரைமுடியைப் பிடுங்கக்கூடாது.
- மருதாணிச் சாயத்தைத் தவிர, வேறு பொருளைக் கொண்டு முடியின் நிறத்தை மாற்றம் செய்யக்கூடாது.
- சப்தம் எழுப்பும் கொலுசு போன்று சப்தம் தரும் அணிகலனை அணியக்கூடாது.
- ஆண்கள் தங்க மோதிரம், ஆபரணம் அணியக்கூடாது. சிறுகுழந்தைகளாக இருந்தாலும் தங்கம் அணிவித்து பழக்கக் கூடாது.
- உளு இன்றி குர்ஆனை தொடக்கூடாது.
- தங்கம், வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது.
- ஆண்கள் பட்டு ஆடை அணியக்கூடாது.
- தலையை மறைத்தும், கால்களில் செருப்பு அணிந்தும் கழிவறைக்குள் செல்ல வேண்டும்.
- நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது கூடாது.
- கிப்லாவின் திசையை நோக்கி கால் நீட்டி உட்காருவது, கால் நீட்டி படுப்பது, மலஜலம் கழிப்பது ஆகியவை கூடாது.
- பள்ளிவாசலில் உலகப் பேச்சுக்களைப் பேசுவது கூடாது.
- கழிவறையில் ஸலாம் சொல்வதோ, ஸலாமிற்கு பதில் சொல்வதோ, தும்மலுக்கு ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று சொல்வதோ, பேசுவதோ கூடாது.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
