இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்களுடன் நெருங்கிய நட்பு சிரியா நாட்டு வணிக பிரயாணத்தில் ஏற்பட்டது. அப்பொழுது அவர்களின் வயது பதினெட்டாகவும், நபி(ஸல்) அவர்களின் வயது இருபதாகவும் இருந்தது.

இப்பிரயாணத்தின் போது இடை வழியில் ஓர் இலந்தை மரத்தின் அருகில் இருவரும் தங்கினார்கள். ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் அங்கிருந்த பாதிரியார் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் மரநிழலில் அமர்ந்திருந்தார்கள். அந்த பாதிரியார் ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், ‘அம் மரத்தின் கீழ் வீற்றிருப்பவர் யார்?’ என விசாரித்தார்.

அதற்கு அவர்கள், ‘முஹம்மதிப்னு அப்துல்லாஹ் இப்னு அப்துல் முத்தலிப்’ என பதிலளித்தார்கள்.

உடனே பாதிரியார், ‘இறைவன் மீது ஆணையாக! இவர் நபியாவார். ஹஜ்ரத் ஈஸா (அலை) அவர்களுக்குப் பிறகு இம்மரத்தடியில் எவரும் அமர்ந்ததில்லை. இவரே இறுதி நபியாவார்’ என்று கூறினார்.

நபி(ஸல்) அவர்கள் நாற்பது வயதை அடைந்து நபிப்பட்டம் கிடைத்தபோது, ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் முஸ்லிமானார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் வயது நாற்பதை எட்டியதும், ‘எனது இரட்சகா! எனக்கும், எனது தாய் தந்தையாருக்கும் நீ அளித்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்த நீ எனக்கு அருள்புரிவாயாக!’ எனப் பிரார்த்தனை புரிந்தார்கள்.

ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

தாய் தந்தையர் இருவருமே இஸ்லாத்தை ஏற்ற பெருமை ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களைத் தவிர முஹாஜிர்களில் வேறு யாருக்கும் கிட்டியதில்லை.

ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களின் இரண்டாவது பிரார்த்தனை பிள்ளைகளின் சீர்திருத்தம் பற்றி இருந்தது. அதன் பலனாக அன்னாரின் பிள்ளைகளும் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம்களானார்கள்.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version