இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

கல்வியைப் பயிலக்கூடியவர்கள் அதன் உயர்வையும் மனதில் கொண்டு கற்றுக்கொள்வதில் ஈடுபடவேண்டும்.

“யார் எனக்கு ஓர் எழுத்தையேனும் கற்றுத் தந்தாரோ, அவருக்கு நான் அடிமை. அவர் விரும்பினால், என்னை விற்றுவிடலாம் அல்லது என்னை உரிமை விட்டுவிடலாம் அல்லது அவருக்குப் பணிவிடை செய்வதற்கு என்னை ஊழியனாக வைத்துக் கொள்ளலாம்” என அறிவின் நுழைவாயில் ஹழ்ரத் அலி (ரலி) அவர்கள் கூறியுள்ளது, எந்தளவு கற்றுக்கொடுப்பவருக்கு மரியாதை செய்யவேண்டும் என்பதைக் காட்டுகிறது.

கல்வி கற்றுக்கொள்பவர் ஒழுக்கத்தைப் பேணி நடக்கவில்லை என்றால், அவர் கற்றுக்கொள்ளும் கல்வி அவருக்குப் பலனளிக்காது. கல்வி கற்கும்போது எவர் ஒழுக்கத்துடன் இல்லையோ, அவர் எப்போதும் ஒழுக்கத்துடன் இருக்கமாட்டார்.

ஆசிரியர் முன் ஒழுக்கமாக இருப்பது ஒரு மாணவனுக்கு அடிப்படை ஒழுக்கமாகும்.

ஆசிரியர் அமரும்முன் மாணவர் அமரக்கூடாது.

ஆசிரியரின் அனுமதி இல்லாமல் அவர்முன் பேசக்கூடாது.

ஆசிரியர் முன் உரத்த குரலில் பேசுவது கூடாது.

ஆசிரியரை பரிகாசம் செய்வது, கேலி செய்வது, பட்டப்பெயர் சூட்டி அழைப்பது, கல்வி கற்றுக் கொடுப்பவரின் உள்ளம் புண்படும்படி நடந்து கொள்வது இவையெல்லாம் குருதுரோகத்தில் உள்ளவையாகும்.

அப்படிப்பட்டவர்களின் கல்வி ஒன்று மறக்கடிக்கப்பட்டுவிடும். அல்லது அதனைக் கொண்டு எவ்வித பலனும் அவர் பெறமாட்டார்.

எவர் கல்வி கற்றுக்கொடுப்பவரின் உள்ளத்தைத் துன்பத்திற்கு உள்ளாக்குவாரோ, அவரின் கல்வியிலிருந்து ஒளி வெளியேறிவிடும்.

கல்வி கற்கும் மாணவர்களின் முதல் ஒழுக்கம் குருபக்தி ஆகும். கற்றுக்கொடுக்கும் ஆசிரியரிடம் தன்னைப்பற்றிய நல்ல நம்பிக்கையும், அன்பும் ஏற்படும்படியாக நடந்து கொள்ள வேண்டும்.

ஆசிரியரின் குறைகளைப் பார்ப்பதோ, அதனைப் பிறரிடம் கூறுவதோ மிகப்பெரிய குற்றமாகும்.

ஆசிரியரின் ரகசியங்களை அமானிதமாக பேணி நடக்கவேண்டும்.

ஆசிரியரிடம் பொய் சொல்வது கூடாது.

ஒரு மாணவர் தன் ஆசிரியரிடம் பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டால், அவர் கல்வி கற்பதற்கே லாயக்கற்றவர்; தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் ஏமாளி. பிறகு நயவஞ்சகத்தனம் வந்துவிடும்.

ஆசிரியரின் முகத்திற்கு முன்னால் எவ்வாறு பணிந்திருப்போமோ, அவரை விட்டு அகன்ற பிறகும் அதே பணிவை அவர் விஷயத்தில் கடைபிடிக்க வேண்டும்.

எவர் ஆசிரியரின் உள்ளத்தைத் துன்புறுத்துவாரோ, அவரது உள்ளத்திலிருந்து கல்வியின் ஒளி வெளியேறிவிடும்.

”ஆசிரியரை மனம் நோகச் செய்பவர் பசியுடையவராகவும், தாகித்தவராகவும் இறப்பார். வாழ்க்கையில் இழிவான செயல்களைச் சந்தித்து, மேலும் இழிவான நிலையில் இறப்பார்” என ஹஜ்ரத் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் எச்சரித்துக் கூறியுள்ளார்கள்.

ஆசிரியர் கண்டிக்கையில்:

தன்பக்கம் நியாயங்கள் இருந்தாலும் அதுகுறித்து வாதம் செய்வது கூடாது.

கல்வி என்பது ஆசிரியரின் அன்பிலிருந்து மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது. அத்தகைய அன்பை இழக்கச் செய்யும் ஒழுக்கக் குறைகளை அறவே செய்யக் கூடாது.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version