இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

அபான் இப்னு உஸ்மான் (ரலி) கூறுகின்றார்கள்:

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை அவமானப்படுத்தி பரிதவிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு மனிதன் குரைஷித் தலைவர்களிடம் சென்று “இப்னு அப்பாஸ் நாளைக் காலை உங்கள் அனைவருக்கும் விருந்தளிக்கிறார்” என்று எல்லா இடங்களிலும் அழைப்புக் கொடுத்துவிட்டு அவன் தலைமறைவாகி விட்டான்.

மறுநாள் காலை சாப்பாட்டு வேளையில், ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வீட்டில் ஒரு பெரிய கூட்டம் கூடி விட்டது. வீடு அடங்க வில்லை; விசாரித்ததற்குப் பிறகுதான் நடந்த இந்த நிலைமை இப்னு அப்பாஸ் அவர்களுக்கு தெரிய வந்தது.

ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அனைவரையுமே உட்கார வைத்தார்கள். அவசரமாக கடைவீதியிலிருந்து பழக் கூடைகளைத் தருவித்து, அவற்றை வந்திருந்தவர்களை சாப்பிட வைத்து, அவர்களுடன் பேச ஆரம்பித்து விட்டார்கள். பல சமையல்காரர்களுக்கு துரிதமாக உணவு சமைக்க உத்தரவிட்டார்கள்.

விருந்தினர் பழங்களைத் தின்று முடிப்பதற்குள், சாப்பாடும் தயாராகிவிட்டது; எல்லோரும் வயிறு நிரம்பச் சாப்பிட்டார்கள்.

இதற்கு பிறகு ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம் பொருளாளரிடம் “இந்த விருந்தை நாம் தினமும் நடத்த சாத்தியப்படுமா?” என்று கேட்க அவர் “ஆம் முடியும்” என்றார்.

உடனே ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “வந்த விருந்தாளிகள் அனைவருக்கும் என்னுடைய வீட்டில் தினமும் காலையில் விருந்து உண்டு. தினமும் வந்து விடுங்கள்” என அறிவிப்புச் செய்தார்கள்.

ஸஹாபா பெருமக்கள் உலகிற்கு வழிகாட்டும் நட்சத்திரங்களாக இருக்கின்றனர்.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version