இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

ஈதுப் பெருநாளன்று சுப்ஹு நேரத்தில் அல்லாஹுதஆலா மலக்குகளை உலகிலுள்ள ஊர்கள் அனைத்திற்கும் அனுப்புகிறான். அவர்கள் பூமிக்கு வந்து பாதைகளின் முகப்புகளில் நின்று கொண்டு, ‘முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தினர்களே! தயாளம் மிக்க இரட்சகனின் சந்நிதானத்திற்குச் செல்வீர்களாக! அவன் பெருங்கொடையளிப்பவன்! மகத்தானவன்! குற்றங்களை மன்னிக்கிறவன்’ என்று சப்தமிட்டுக் கூறுகின்றனர். அந்தச் சப்தத்தை மனிதர்கள், ஜின்கள் ஆகிய இருசாரரைத் தவிர ஏனைய படைப்பினங்கள் அனைத்தும் கேட்கின்றன.

பின்னர் மனிதர்கள் ஈதுகாஹ்விற்குச் செல்லும் பொழுது அல்லாஹுதஆலா மலக்குகளை நோக்கி, ‘ஒரு கூலிக்காரருக்கு, வேலைத்தை முடித்தபின் என்ன பிரதிபலன் கொடுப்பது?’ என்று கேட்கிறான்! அதற்கு மலக்குகள், ‘எங்கள் இரட்சகனே! அவருக்குரிய பிரதிபலன் அவருடைய கூலியைப் பரிபூரணமாகக் கொடுப்பதாகும்’ என்று கூறுகின்றனர்.

‘என்னுடைய மலக்குகளே! என் அடியார்கள் ரமலான் மாதத்தில் நோன்பு வைத்து, இரவில் தொழுததற்குப் பிரதியாக என்னுடைய திருப்தியையும், மன்னிப்பையும் நான் வழங்கிவிட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சியாக்குகிறேன்’ என்று அல்லாஹுதஆலா கூறுகிறான்.

பிறகு அல்லாஹுதஆலா அடியார்களை நோக்கி, ‘என்னுடைய அடியார்களே! என்னிடம் நீங்கள் கேளுங்கள். என்னுடைய கண்ணியத்தின் மீதும், என் கம்பீரத்தின் மீதும் ஆணையாக! இன்று

உங்களுடைய இந்தக் கூட்டத்தில், உங்களுடைய மறுமையின் விஷயத்தில் எதனை நீங்கள் என்னிடம் கேட்டாலும் அதனை நிச்சயம் நான் கொடுத்திடுவேன். உங்களுடைய உலக விஷயத்தில் எதையேனும் நீங்கள் கேட்டால் அதில் உங்களுக்குப் பலன் தரும் விஷயத்தில் நான் கவனம் செலுத்துவேன்.

என்னுடைய கண்ணியத்தின் மீது ஆணையாக! என்னுடைய கட்டளைகளை நீங்கள் நினைவில் கொண்டு, வாழும் காலமெல்லாம் உங்களுடைய தவறுதல்களை நான் மறைத்திடுவேன். என் கண்ணியத்தின் மீதும், கம்பீரத்தின் மீதும் ஆணையாக! குற்றவாளிகள், மேலும் இணைவைப்பாளர்களுக்கு மத்தியில் உங்களை நான் கேவலப்படுத்தமாட்டேன். இப்பொழுது நீங்கள் மன்னிக்கப்பட்டவர்களாகத் திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் என்னைத்திருப்தியுறச் செய்தீர்கள். நான் உங்களைப் பொருந்திக் கொண்டேன்’ என்று கூறுகிறான்.

இந்த உம்மத்தினர் ரமலான் மாதத்தை முடித்து ஈதுல் பித்ரைக் கொண்டாடும் நாளில் அல்லாஹுதஆலா அவர்களுக்கு வழங்கிய வெகுமதியைக் கண்டு மலக்குகள் மகிழ்ச்சியடைந்து நற்செய்தி கூறுகின்றனர் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

— தர்கீப்

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version