அமீருல் முஃமினீன் உமர்(ரலி) அவர்கள் ஒரு வெள்ளி கிழமை (ஜுமுஆ) அன்று உரை நிகழ்த்தினார்கள்.
‘அல்லாஹ்வை புகழ்ந்து போற்றி பின், நபி(ஸல்) அவர்களையும், அபூபக்ர்(ரலி) அவர்களையும் நினைவு கூர்ந்தார்கள். அதன்பின், ‘நான் இன்று ஓர் சேவல் என்னை இரண்டு முறை கொத்துவதைப் போன்று கனவு கண்டேன். இதற்கு, என் ஆயுட்காலம் முடிந்துவிட்டது என்றே நான் பொருள் கொண்டேன். அது சிவப்பு நிற சேவலாகும். பிறகு அந்த கனவை, அபூபக்ர்(ரலி) அவர்களின் மனைவி அஸ்மா பிந்த் உமைஸ்(ரலி) அவர்களிடம் தெரிவித்தேன். அரபியரல்லாத ஒருவர் உம்மைக் கொல்வார்’ என விளக்கம் சொன்னார்கள்.
நான்கு நாட்கள் கழித்து அபூலுஃலு ஃபைரூஸ் என்பவனால் மஸ்ஜிதுன் நபவியில் பஜ்ரு தொழுகையில் வைத்து கத்தியால் பலமுறை குத்தப்பட்டு ஷஹீது ஆனார்கள்.
மதீனாவில் இறக்க வேண்டும் என்பதும் அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டு ஷஹீதாக்கப்பட வேண்டும் என்பது அவர்களது பிரார்த்தனையாக இருந்து வந்தது.
