இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

மனித வாழ்க்கையின் அன்றாட தேவைகளில் ஒன்று மலஜலம் கழித்தலாகும். நபி(ஸல்) அவர்கள் கூறிய வழிமுறையில் ஒவ்வொரு செயலையும் நிறைவேற்றினால் அதுவும் இறைவழிபாடாக ஆகிவிடும். நபியவர்களின் சுன்னத்தை நிறைவேற்றுவது ஈருலகிலும் நிம்மதிக்கு வழிவகுக்கும்.

  • சிறுநீர், மலம் கழிக்கச் செல்லும் போது தலையை மூடிக் கொள்ள வேண்டும்.
  • கால்களில் செருப்பு அணிய வேண்டும்.
  • இடது காலை முதலில் உள்ளே வைத்து கழிவறைக்குள் செல்ல வேண்டும்.
  • கழிவறையின் உள்ளே செல்லும் முன், இந்த துஆவை ஓத வேண்டும்:
  • اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ
  • “அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மினல் குபுஸி வல் கபாயிஸி”
  • பொருள்: “யா அல்லாஹ்! நிச்சயமாக நான் ஆண், பெண் ஜின்களின் கெடுதிகளை விட்டும், உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.”
  • கிப்லா திசையை முன்னோக்கி அல்லது பின்னோக்கி அமரக்கூடாது.
  • எச்சில் துப்புதலை அங்கு தவிர்க்க வேண்டும்.
  • விரைவாக வெளியேற முயற்சி செய்ய வேண்டும்.
  • நடைபாதைகளிலோ, நிழல் தரும் மரங்களின் அடியிலோ, நீர்நிலைகளிலோ மலஜலம் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • புதர்கள், காற்றடிக்கும் திசைக்கு எதிராக சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • தாழ்வான பரப்பிலிருந்து மேட்டை நோக்கி சிறுநீர் கழிக்கக்கூடாது.
  • மலஜலம் கழித்தவுடன் நன்றாக நீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
  • சிறுநீர் ஆடையில் பட்டுவிட்டால் தொழுகை கூடாது; ஆகவே, அதைத் தண்ணீர் ஊற்றிச் சுத்தம் செய்ய வேண்டும்.
  • மலஜலம் கழிக்கும் போது பேசுவது, பாங்குக்கு பதில் சொல்வது, தும்மிவிட்டு அல்ஹம்துலில்லாஹ் சொல்வது, ஸலாம் சொல்வது, ஸலாமிற்கு பதில் சொல்வது இவை எதுவும் சொல்லக் கூடாது.
  • கழிவறையின் உள்ளே இருந்து கொண்டு வெளியில் இருப்பவர்களோடு பேசுவது கூடாது.
  • கழிவறைக்குள் உண்பது, பருகுவது ஆகியவை கூடாது.
  • மல, ஜலம் கழித்துவிட்டு வெளியேறும்போது, முதலில் வலது காலை வைத்து வெளியே வந்தபின், இந்த துஆவை ஓத வேண்டும்:

غُفْرَانَكَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الْأَذَىٰ وَعَافَانِي

  • “குஃப்ரானக அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்ஹப அன்னில் அதா வஆஃபானீ.”
  • பொருள்: “யா அல்லாஹ்! என் பாவத்தை மன்னிப்பாயாக! எனது வயிற்றில் வேதனை செய்யக்கூடிய அசுத்தங்களை வெளியாக்கி, எனது கஷ்டங்களை நீக்கி, சுகத்தைத் தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்”.
Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version