மனித வாழ்க்கையின் அன்றாட தேவைகளில் ஒன்று மலஜலம் கழித்தலாகும். நபி(ஸல்) அவர்கள் கூறிய வழிமுறையில் ஒவ்வொரு செயலையும் நிறைவேற்றினால் அதுவும் இறைவழிபாடாக ஆகிவிடும். நபியவர்களின் சுன்னத்தை நிறைவேற்றுவது ஈருலகிலும் நிம்மதிக்கு வழிவகுக்கும்.
- சிறுநீர், மலம் கழிக்கச் செல்லும் போது தலையை மூடிக் கொள்ள வேண்டும்.
- கால்களில் செருப்பு அணிய வேண்டும்.
- இடது காலை முதலில் உள்ளே வைத்து கழிவறைக்குள் செல்ல வேண்டும்.
- கழிவறையின் உள்ளே செல்லும் முன், இந்த துஆவை ஓத வேண்டும்:
- اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ
- “அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மினல் குபுஸி வல் கபாயிஸி”
- பொருள்: “யா அல்லாஹ்! நிச்சயமாக நான் ஆண், பெண் ஜின்களின் கெடுதிகளை விட்டும், உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.”
- கிப்லா திசையை முன்னோக்கி அல்லது பின்னோக்கி அமரக்கூடாது.
- எச்சில் துப்புதலை அங்கு தவிர்க்க வேண்டும்.
- விரைவாக வெளியேற முயற்சி செய்ய வேண்டும்.
- நடைபாதைகளிலோ, நிழல் தரும் மரங்களின் அடியிலோ, நீர்நிலைகளிலோ மலஜலம் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- புதர்கள், காற்றடிக்கும் திசைக்கு எதிராக சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- தாழ்வான பரப்பிலிருந்து மேட்டை நோக்கி சிறுநீர் கழிக்கக்கூடாது.
- மலஜலம் கழித்தவுடன் நன்றாக நீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
- சிறுநீர் ஆடையில் பட்டுவிட்டால் தொழுகை கூடாது; ஆகவே, அதைத் தண்ணீர் ஊற்றிச் சுத்தம் செய்ய வேண்டும்.
- மலஜலம் கழிக்கும் போது பேசுவது, பாங்குக்கு பதில் சொல்வது, தும்மிவிட்டு அல்ஹம்துலில்லாஹ் சொல்வது, ஸலாம் சொல்வது, ஸலாமிற்கு பதில் சொல்வது இவை எதுவும் சொல்லக் கூடாது.
- கழிவறையின் உள்ளே இருந்து கொண்டு வெளியில் இருப்பவர்களோடு பேசுவது கூடாது.
- கழிவறைக்குள் உண்பது, பருகுவது ஆகியவை கூடாது.
- மல, ஜலம் கழித்துவிட்டு வெளியேறும்போது, முதலில் வலது காலை வைத்து வெளியே வந்தபின், இந்த துஆவை ஓத வேண்டும்:
غُفْرَانَكَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الْأَذَىٰ وَعَافَانِي
- “குஃப்ரானக அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்ஹப அன்னில் அதா வஆஃபானீ.”
- பொருள்: “யா அல்லாஹ்! என் பாவத்தை மன்னிப்பாயாக! எனது வயிற்றில் வேதனை செய்யக்கூடிய அசுத்தங்களை வெளியாக்கி, எனது கஷ்டங்களை நீக்கி, சுகத்தைத் தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்”.
