இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

அல்லாஹ் குர்ஆனில்,

لَّذِیْنَ یَبْخَلُوْنَ وَیَاْمُرُوْنَ النَّاسَ بِالْبُخْلِ وَیَكْتُمُوْنَ مَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ؕ وَاَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ عَذَابًا مُّهِیْنًا ۟ۚ

கஞ்சத்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படி தூண்டி, மேலும் அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக் கொள்கிறார்கள். அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.

– சூரா அந்நிஸா : 37

கஞ்சத்தனம் உலகப் பேராசையின் அடையாளமாகும். அல்லாஹ்வின் கஜானா விசாலமானது. அதில் குறைவு ஏற்பட்டுவிடாது. அல்லாஹ் அடியார்களிடம் கஞ்சத்தனத்தையும், பேராசையையும் வெறுக்கிறான். தம் குடும்பத்தினருக்கு தாராளமாக (அனுமதிக்கப்பட்ட) செலவு செய்பவர்களின் பொருளில் அல்லாஹ் அபிவிருத்தி செய்கிறான்.

அல்லாஹ் குர்ஆனில்,

وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا اشْهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ هُوَ خَيْرًا لَهُم بَلْ هُوَ شَرٌّ لَهُمْ سَيُطَوَّقُونَ مَا يَخِلُوا بِهِ يَوْمَ الْقِيمَةِ

அல்லாஹ் தனது அருளைக் கொண்டு தங்களுக்குக் கொடுத்திருக்கும் செல்வத்தில் யார் கஞ்சத்தனம் செய்கிறார்களோ அது அவர்களுக்கு நல்லது என்று திண்ணமாக எண்ண வேண்டாம். அது அவர்களுக்குத் தீங்காகவே முடியும். அவர்கள் கஞ்சத்தனத்தால் சேர்த்து வைத்தவற்றையெல்லாம் கியாமத்நாளில் அவர்களின் கழுத்தில் அரிகண்டமாக (நெருப்பு வளையம்) போடப்படும்.

— சூரா ஆல இம்ரான் : 180

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

கஞ்சத்தனத்தைப் பற்றி நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன். ஏனெனில் உங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு சமூகம் கஞ்சத்தனத்தால் அழிந்துவிட்டது. பேராசை அவர்களை உலோபியாக்க ஏவியது. அவர்களும் உலோபியாகிவிட்டார்கள். பாவம் செய்யுமாறு ஏவியது. அவர்களும் பாவம் செய்து விட்டார்கள்.

– இப்னு உமர் (ரலி)

ஏழை, எளிய மக்களுக்கும், மஸ்ஜித், மதரஸா என்ற இறைப் பள்ளிகளுக்கும், இன்னும் வழிப்போக்கர்கள், அறிந்தவர்கள், அறியாதவர்களுக்கும் உணவு, ஆடை, செல்வத்தால் தாராளமாகக் கொடுப்பதினால் இறைநம்பிக்கை அதிகப்படுவதுடன், நன்மைகளும் கிடைத்துவிடும்.

நபி யஹ்யா(அலை) அவர்கள் ஒரு முறை ஷைத்தானிடம், “உனக்கு எல்லோரையும் விட அதிக விருப்பமுள்ள மனிதன் யார்?’ எனக் கேட்டார்கள்.

அதற்கு ஷைத்தான், “எனக்கு அனைவரையும் விட அதிக விருப்பம், உலோபியான கஞ்சனின் மீது இருக்கிறது. மேலும், எல்லோரையும் விட அதிக வெறுப்பு, தர்மம் செய்பவனின் மீது இருக்கிறது’ என பதிலளித்தான்.

நபி யஹ்யா (அலை) அவர்கள் அதற்கான காரணம் வினவ, ஷைத்தான், “கஞ்சனோ தனது உலோபித்தனத்தின் காரணமாக என்னை கவலை இல்லாமல் ஆக்கி வைத்துள்ளான்’. அதாவது அவனுடைய உலோபித்தனமே அவனை நரகத்திற்கு இழுத்துச் செல்ல போதுமானது.

கஞ்சத்தனம் உள்ளவர், உபகாரம் செய்தபின் சொல்லிக் காட்டுபவர் ஆகியோர் சுவர்க்கம் செல்லமாட்டார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

பேராசையுடையவனின் செல்வமும், கஞ்சத்தனம் உடையவனின் செல்வமும் அவனுக்கே பலன் தராது. மாற்றமாக, தன் அத்தியாவசியத் தேவையை பூர்த்தி செய்வதுடன், ஏழை எளிய தேவையுடைய மக்களுக்கும் உதவிகள் செய்வது கொண்டே ஆத்மீக சுகம் பெறமுடியும். பசித்தோருக்கு உணவளிப்பதும், ஆடை இல்லாதோருக்கு ஆடையளிப்பதும், துன்புறுவோரின் துயரத்தை நீக்குவதும் என்றென்றும் நிலைத்து நிற்கும். நன்மைகளில் உள்ளவையாகவும், நம் ஆத்மா ஈருலகிலும் சுகம் பெறுவதற்கு காரணமாகவும் இருக்கும்.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version