இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

இரு மனிதர்களுக்கிடையே அவ்விருவரின் அனுமதியின்றி அமர்வது கூடாது.

-அபூதாவூத்

மனிதன் யாரை நேசிக்கிறானோ, அவருடன்தான் மறுமையில் இருப்பார். அவரது தோழமைதான் கிடைக்கும்.

– முஸ்லிம்

எவர் லுஹாத் தொழுகையை நிரந்தரமாக தொழுது வருவாரோ, அவரின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அப்பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் சரியே!

– இப்னுமாஜா

எவர் பிறரிடம் ஒருவரை இழிவுபடுத்துவதற்காக அவரிடம் இல்லாத குறையைக் கூறுவாரோ, அந்தத் தீமையை நிரூபிக்கும் வரை அல்லாஹுதஆலா அவரை நரக நெருப்பில் கைது செய்து வைத்திருப்பான். (அவர் எப்படி நிரூபிப்பார்?)

– தப்ராணீ

முகத்திற்கு முன் புகழ்பவர்களைக் கண்டால் அவர்களின் வாயில் மண்ணை வாரி இறையுங்கள்.

– முஸ்லிம்

ஒரு மனிதரிடம் மூன்று குணங்கள் இருந்துவிட்டால், அவருடைய ஈமான் பூரணமாகும்.

  • முதலாவதாக, இறைவனுக்காகச் செய்யப்படும் காரியங்களில் எவருடைய நிந்தனையையும் பொருட்படுத்தாமல் இருப்பது,
  • இரண்டாவது, எந்த நற்காரியத்திலும் முகஸ்துதிக்கு இடம் கொடுக்காமல் இருப்பது,
  • மூன்றாவது உலகம், மறுமை ஆகிய இரண்டு காரியம் எதிர்ப்பட்டால், அவற்றில் மறுமைக்குரிய காரியத்தையே தேர்ந்தெடுப்பது ஆகியவையாகும்.

– அபூதாவூத்

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version